Sagot :
வீட்டு உபயோக சிலிண்டர் விலை நிர்ணயம்: கூடுதல் தொகை செலுத்த வேண்டாம் - ஆட்சியர் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நுகர்வோர்கள் கூடுதல் தொகை செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடியில் ரூ.873.50/- ஆகவும், கோவில்பட்டியில் ரூ.872.00/- ஆகவும், கழுகுமலையில் ரூ.880.50/- ஆகவும், கயத்தாரில் ரூ.883.50/- ஆகவும், எட்டையபுரத்தில் ரூ.872.00/- ஆகவும் மற்றும் சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.890.50/- எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடியில் ரூ.873.50/- ஆகவும், ஸ்ரீவைகுண்டத்தில் ரூ.874.00/- ஆகவும், மற்றும் குளத்தூரில் ரூ.874.50/- எனவும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.873.50/- எனவும், 01.05.2021 முதல் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே நுகர்வோர்கள் எரிவாயு முகவர்களிடமிருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு (14.2kg) மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.